தற்போதைய செய்திகள்
Kiran-Kumar-720x450

31 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ தலைவர் கிரண் குமார் பேட்டி….

மீனம்பாக்கம், ஜன.12-
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி சி-40 ராக்கெட் ஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து 31 செயற்கை கோள்களுடன் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்தார்.
செயற்கை கோள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, இன்று தனது 100-வது செயற்கை கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இந்நிலையில் நேற்று காலை இஸ்ரோ தலைவர் கிரண் குமார் பெங்களூருவில் இருந்து சென்னை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

பி.எஸ்.எல் வி சி-39 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது ஹீட் ஷீல்ட் எனப்படும் பாதுகாப்பு கவசம் திறக்காததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் இந்த முறை மொத்தம் 31 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம். எந்தவித தொழில்நுட்ப பிரச்சனைகளும் இந்த முறை ஏற்படாதவாறு பல சோதனைகள் நடத்தபட்டுள்ளது என்று கூறினார்.
விண்கலம்
விண்ணில் செலுத்தப்படும் 31 செயற்கைகோளில், 28 செயற்கைகோள்கள் வெளிநாட்டை சேர்ந்ததாகும். மற்ற 3 செயற்கைகோள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. மேலும் சந்திராயன் 2 விண்கலம் தயாரிக்கும் பணி முடிவடையும் நிலையில் இருப்பதாகவும், இந்த ஆண்டுக்குள் அதுவும் விண்ணில் செலுத்தப்படும். புதிதாக இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள சிவனுக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார்.
கார்டோசாட் 2 இன்று காலை 9.29 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்டவுண் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. இந்தியாவில் இருந்து ஒரு சிறியவகை செயற்கைக்கோள், ஒரு நானோ செயற்கைக்கோள் ஆகியவையும் ஏவப்படவுள்ளன. கார்டோசாட் 2 உட்பட 31 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி சி40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
விண்ணில் நிலை நிறுத்தம்
320 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி சி40 ராக்கெட், பூமியில் இருந்து புறப்பட்ட 2 மணி நேரம் 22 வினாடிகளில் 31 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பி.எஸ்.எல்.வி சி-40 ராக்கெட் மூலம் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் 31 விண்கலங்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகின்றன.
Leave a Reply