BREAKING NEWS

ஆசிய, ‘குவாஷ்’ போட்டியில் வெண்கலப் பதக்கங்கள் வென்ற  தமிழக வீரர்கள் 3 பேருக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

ஒற்றையர் பிரிவுஇந்தோனேஷியாவிலுள்ள ஜகார்த்தா நகரில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. அங்கு நடைபெற்ற, குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சவுரவ் கோஷலுக்கு ரூ. 20 லட்சம் உயரிய ஊக்க தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

முதல்வர் வாழ்த்து

அதேபோல குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பத்தக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தீபிக்கா கார்த்திக் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகிய இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கங்கள் வென்ற இந்த மூவரை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக வாழ்த்து கடிதமும் அனுப்பியுள்ளார்.




Leave a Reply