தற்போதைய செய்திகள்

30-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் தமிழிசை சவுந்திரராஜன் உறுதி…..

சென்னை,

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை வரும் 30-ந் தேதிக்குள் அமைக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உறுதியளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம்

தமிழகமும், கர்நாடகமும் காவிரி நீரை எந்தளவு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றும், அதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பா.ம.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக அரசும் இதுதொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

30ந் தேதிக்குள் அமைக்கப்படும்

மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த கூடாது எனச் சொல்லும் காங்கிரஸ் பின்னோக்கி செல்கிறது. எதைக் கொண்டு வைத்தாலும், தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் மட்டும்தான் வாங்கும். தேர்தலில் மக்கள் எடுக்கும் முடிவை, இயந்திரத்தின் மீது போட்டு காங்கிரசார் கொச்சைப்படுத்த வேண்டாம்.
மு.க.ஸ்டாலின் திராவிட நாடு குறித்த கருத்தில் குழப்பத்தில் உள்ளார். அ.தி.மு.க.வை பா.ஜ., இயக்குவதாக பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வரும் 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பை பா.ஜ.க. நிச்சயம் நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply