BREAKING NEWS

3 இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், சில இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு ஒன்றை கட்டி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி பேருந்து ஒன்றின் மீது மோதி அதனை நேற்று காலை வெடிக்க செய்துள்ளான்.

தொடர்ந்து வேறு இரு இடங்களிலும் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில், 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை உயர கூடும் என உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி நஸ்ரத் கூறியுள்ளார். பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் பலன்களை பெறுவதற்காக தீவிரவாதிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.




Leave a Reply