BREAKING NEWS

27 பேருக்கு சிறந்த “கைத்தறி நெசவாளர் விருது” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 27 பேருக்கு சிறந்த கைத்தறி நெசவாளர் விருதினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சிறந்த நெசவாளர் விருது

தமிழ்நாடு அரசு 2013-14ம் ஆண்டு முதல், “மாநில அளவிலான சிறந்த நெசவாளருக்கான விருதுடன்”

1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 2019-20ம் ஆண்டிற்கு மாநில அளவில் அதிக உற்பத்தியும், விற்பனையும் பெற்றுத்தந்த பட்டு இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சேலம்,

ஜே.ஒ. கொண்டலாம்பட்டி பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்

சுப்ரமணிக்கும், பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பரமக்குடி பாண்டுரங்கனுக்கும், இரண்டாம் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பாபு (பட்டு இரகம்) மற்றும் மல்லிகா (பருத்தி இரகம்) ஆகியோருக்கு வழங்கினார்.

27 பேருக்கு விருது

மூன்றாம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை சரவணன் (பட்டு இரகம்) மற்றும் ராதாமணி (பருத்தி இரகம்) ஆகியோருக்கும், சிறந்த வடிவமைப்பாளருக்கான முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கும்பகோணம், திருபுவனம் கார்த்திகேயனுக்கும், சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி இரகங்களை நெசவு செய்தமைக்காக, 20 திறன்மிகு நெசவாளர்களுக்கு முதல் பரிசாக தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் என மொத்தம், 27 கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளுக்குரிய பரிசுத் தொகையான 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்தார்.

பணி நியமன ஆணை

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் திருச்செங்கோடு சரக உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அண்ணா கூட்டுறவு நூற்பாலை, பாரதி கூட்டுறவு நூற்பாலை, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய நூற்பாலைகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான நிரந்தர பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தை சார்ந்த 5 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், ஓட்டுநர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *