தற்போதைய செய்திகள்

22 அமைச்சர்கள், 2 முதல்வர்களை களம் இறக்கிய பா.ஜ.க இறுதிக்கட்ட பிரசாத்தில் அனல் பறந்தது

22 அமைச்சர்கள், 2 முதல்வர்களை களம் இறக்கிய பா.ஜ.க
இறுதிக்கட்ட பிரசாத்தில் அனல் பறந்தது
கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு
கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது இறுதிகட்ட பிரசாரத்தில் 22 அமைச்சர்கள், 2 முதல்வர்கள் பா.ஜ.க களமிறக்கி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் அனல் பறந்தது.தேர்தல்

கர்நாடகா மாநில சட்டசபைக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியில் அமரப் போவது யார்? என்பதில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடக்கிறது.

கர்நாடகா தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் அங்கு வெற்றி பெறுவது பா.ஜ.க.- காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியமானதாக உள்ளது.

தலைவர்கள்

இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவில் மிக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் சித்தராமையா, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

கடந்த 2 மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியது. கடைசி நாளான நேற்று மிகப்பெரிய பிரசார படையை அரசியல் கட்சிகள் களமிறக்கினர்

அமைச்சர்கள்

பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், ஆனந்த் குமார், சதானந்த கவுடா, அனுராக் தாகூர், கிருஷ்ணபால் குஜ்ஜார், மீனாட்சி லேகி, பியூஷ் கோயல் உள்ளிட்ட 22 அமைச்சர்கள் சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் கவுகார் உள்பட 2 முதல்வர்கள் என 26 தலைவர்கள் திறந்த வாகனங்களில் சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரசாரம்

சித்தராமையாவின் பதாமி தொகுதியில் அமித் ஷா பிரசாரம் மேற்கொள்ள கொண்டார். இதேபோல் மற்ற கட்சிகள் சார்பிலும் நட்சத்திர பேச்சாளர்களுடன் முக்கிய தலைவர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் நேற்று கர்நாடக தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அனல் பறந்தது.

நேற்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) வாக்காளர்களுக்கு சிலிப் வழங்கும் பணி நடைபெறும். நாளை வாக்குப்பதிவு நடைபெறும். இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Leave a Reply