BREAKING NEWS

2020 ஐபோன்களில் 5ஜி வசதி ஆப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஐபோன்களில் 5ஜி வசதி வழங்குவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

2020 ஐபோன் மாடல்கள் பற்றி ஏற்கனவே தகவல் வெளியாக துவங்கிவிட்டன. அந்த வகையில் 2020 ஐபோன்களில் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, ஓ.எல்.ஈ.டி. பேனல் வழங்கப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2020 ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் 2020 ஆண்டில் வெளியாகும் அனைத்து ஐபோன்களிலும் 5ஜி வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் இன்டெல் 5ஜி மொபைல் மோடெம் வியாபாரத்தை கைப்பற்றி இருப்பதே இத்தகவல் வெளியான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர 2020 ஐபோன்களில் 5ஜி வழங்குவதன் மூலம் ஆப்பிள் தனது ஏ.ஆர். சேவைகளில் இருந்து பலன்பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. 5ஜி நெட்வொர்க்களில், எம்.எம். வேவ் தொழில்நுட்பம் அதிவேக இணைய வசதியை வழங்கும். 2020 ஐபோன்களில் எம்.எம். வேவ் மற்றும் சப்6ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக 2019 ஐபோன் மாடல்கள் என கூறும் பல்வேறு ரென்டர்கள் இணையத்தில் வெளியானது. புதிய ஐபோன்கள் செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கிறது. 2019 ஐபோன்களின் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்ற வகையில், புதிய ஐபோன் எக்ஸ்.எஸ். மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ் மாடல்களில் மொத்தம் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

ஐபோன் எக்ஸ்.ஆர். மாடலின் 2019 வெர்ஷனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 2019 ஐபோன்களில் கேமரா அம்சம் அதிகளவு மாற்றங்களை பெற இருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை மிக தெளிவாக படம்பிடிக்க அல்ட்ராவைடுஆங்கிள் லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.

ஐபோன் எக்ஸ்.ஆர். மாடலின் மேம்பட்ட மாடலில் கூடுதல் சென்சார் சூம் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.




Leave a Reply