BREAKING NEWS

2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்

ஹூன்டாய் நிறுவனத்தின் 2019 ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம். ஹூன்டாய் மோட்டார் இந்தியா தனது ஐ20 ஆக்டிவ் மாடலை அப்டேட் செய்துள்ளது. அதன்படி 2019 ஐ20 ஆக்டிவ் மாடல் விலை ரூ. 7.74 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடல் அந்நிறுவன வலைத்தளத்தில் மூன்று வேரியண்ட்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதன்படி ஐ20 ஆக்டிவ் எஸ். எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ். டூயல்டோன் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.புதிய மாடலில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டிரவைர் மற்றும் பாசஞ்சர் சீட்பெல்ட் ரிமைண்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடிவமைப்பில் புதிய 2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடல் முந்தைய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது.இதன் முன்புறம் ப்ரோஜெக்டர் லென்ஸ் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் கார்னெரிங் லேம்ப், ஃபாக் லேம்ப், எல்.இ.டி. டெயில்லைட்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

உள்புறம் அதிகளவு மாற்றம் செய்யப்படவில்லை. இதில் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, புஷ் ஸ்டார்ட்ஸ்பாட், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், பின்புற ஏ.சி. வென்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.2019 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

இது 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க் மற்றும் 6ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க் மற்றும் 6ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *