BREAKING NEWS

15 வயதே ஆன இந்திய சிறுவன் சாதனை ஆசிய துப்பாக்கி சுடுதல் – வெள்ளிப் பதக்கம் வென்று

 

 

ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்திய சிறுவன் ஷர்துல் டபுள் ட்ரப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான டபுள் டிரப் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்திய அணியில் பங்கு கொண்ட 15 வயதே ஆன ஷர்துல் விஹான் தகுதிப் பெற்றார். இவருடன் கொரியா, கத்தார், சீனா, கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த ஐந்து வீரர்களும் கலந்து கொண்டனர்.

ஒருபுள்ளியில் தவற விட்ட தங்கம்

இதில் இந்திய சிறுவன் ஷர்துல் விஹான் 73 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 34 வயதான ஹியுன்வூ ஷின் 74 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஷர்துல் விஹான் தங்கப் பதக்கத்தை தவறவிடடார்.கத்தார் வீரர் ஹமாத் அலி 53 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றார். இந்த பதக்கம் மூலம் இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.




Leave a Reply