BREAKING NEWS

15 ந் தேதி வருகிறான், ‘சங்கத்தமிழன் ‘

விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ள படம் ‘சங்கத்தமிழன்’ .விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில்
விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி நடிக்க
இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஆர்.வேல்ராஜ்
இப்படம் கடந்த் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்து பிறகு தள்ளிப்போனது. இப்போது இப்படம் வருகிற 15 ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ‘லிப்ரா புரடொக்க்ஷன்ஸ் ‘ நிறுவனம் கைப்பற்றியுள்ளது .




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *