BREAKING NEWS

144 தடை உத்தரவை மீறியதாக தூத்துக்குடியில் வேல்முருகன் கைது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்திக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் நேற்று தூத்துக்குடி சென்றனர். விமான நிலையத்தில் இருந்து 5 க்கும் மேற்பட்ட கார்களில் வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மருத்துவமனைக்கு செல்ல முயன்றனர்.

புதுக்கோட்டை என்ற இடத்தில் அவர்களை தடுத்த போலீசார் தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஒருவர் மட்டுமே செல்ல முடியும் என்று தெரிவித்தனர். ஆனால் வேல்முருகன் தடையை மீறி செல்ல முயன்றார். இதனை தொடர்ந்து போலீசார் வேல்முருகன் உள்பட அவரின் கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




Leave a Reply