தற்போதைய செய்திகள்

12 டன் சாக்லெட் லாரி கவிழ்ந்து ரோடு முழுவதும் சாக்லெட் ஆறாக ஓடியது

12 டன் சாக்லெட் லாரி கவிழ்ந்து ரோடு முழுவதும் சாக்லெட் ஆறாக ஓடியது

12 டன் சாக்லெட் லாரி கவிழ்ந்து ரோடு முழுவதும் சாக்லெட் ஆறாக ஓடியது.

12 டன் சாக்லெட்

போலந்து நாட்டில் இருக்கும் வார்ஸாவ் என்ற பகுதியில் டேங்கர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. சாலையில் வரும் போது, லாரியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, லாரி சறுக்கிக் கொண்டு சென்றுள்ளது. பின் கடைசியாக, சாலை தடுப்புகளை மோதி மொத்தமாக சாலைக்கு நடுவே தலை குப்புற கவிழ்ந்து உள்ளது.

இந்த லாரி டேங்கரில் முழுக்க முழுக்க சாக்லேட் கலவை இருந்துள்ளது. மொத்தமாக, திரவ நிலையில் இந்த 12 டன் சாக்லெட் நிரப்பப்பட்டுள்ளது.

இழப்பு

இந்த லாரி கவிழ்ந்த உடன் மொத்த சாக்லேட் கலவையும் தரையில் சிதறி ரோட்டில் ஆறாக ஓடியுள்ளது. இதனால் இந்த சாலை உடனடியாக மூடப்பட்டது. சாலையின் இரண்டு பக்கமும் இந்த சாக்லெட் ஆறு ஓடி இருக்கிறது. அதோடு, இந்த 12 டன் சாக்லெட் குவியல் சாலையில் ஓடியவுடன் உறைந்து போய் இருக்கிறது.

இதனால் எளிதாக முடியவேண்டிய சாலை சீரமைப்பு பணி 8 மணி நேரம் இழுத்து இருக்கிறது. அந்த லாரியும் சாலையிலேயே சாக்லெட்டுடன் ஒட்டிக் கொண்டு இறுகி இருக்கிறது. இதனால் அந்த சாக்லேட் நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply