தற்போதைய செய்திகள்

100 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர். தேனியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்….

தேனி

தேனியில் 100 பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
அம்மா ஸ்கூட்டர்
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், தலைமையில் நடைபெற்ற அரசு விழா நடைபெற்றது.

விழாவில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு பெண் குழந்தைகளை பாதுகாத்திடவும், ஆண் குழந்தைகளை மட்டும் விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் பெற்றதனால் பொருளாதார பாதிப்பு என்ற பெற்றோர்களின் மனநிலையை போக்கிடவும், வறுமையில் வாழும் ஏழை தாய்மார்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கிட வேண்டும்.
அனைத்து மகளிர் காவல் நிலையம்

பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை எளிதில் தீர்த்திடும் வகையில், இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு பெண் கல்வியினை ஊக்கப்படுத்திடவும், ஏழ்மையின் காரணமாக பெண்களின் திருமணம் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசு ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் பத்து மற்றும் 12-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25,000- நிதியுதவியும், 8 கிராம் திருமாங்கல்யத்திற்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000- நிதியுதவியும் 8 கிராம் திருமாங்கல்யத்திற்கு தங்கமும் வழங்கி வருகிறது.

அம்மா ஸ்கூட்டர் திட்டம்

பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பங்காற்றிட தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் ஊக்கமும், ஆக்கமும் அளித்து வருகிறது.

அதனடிப்படையில், உழைக்கும் மகளிரின் வேலைச்சுமையினை குறைக்கும் வகையிலும், பயணத்தின் போது மகளிருக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் வகையிலும் உழைக்கும் மகளிருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்

இந்த விழாவில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மகளிர் திட்ட அலுவலர் மூ.கல்யாண சுந்தரம், மாவட்ட சமூக நல அலுவலர் செ.உமையாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply