BREAKING NEWS

10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியானது 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம்.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 4 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பொற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

3 மணி நேரத்திற்கு முன்பே

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கடந்த மார்ச்5-ந் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு கடந்த ஏப்ரல்ங 4-ந் தேதி முடிவடைந்தது. இதில் நாடு முழுவதும் 16 லட்சத்து 88 ஆயிரத்து 144 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். மேலும் இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை கிளம்பியது. இதையெடுத்து தேர்வுகள் முடிவடைந்தது.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்திருந்து. இந்நிலையில் தேர்வு முடிவுகள் 3 மணி நேரத்திற்கு முன்பே www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகியவற்றிலும், www.cbse.examresults.net, www.results.gov.in என்ற சி.பி.எஸ்.இ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

முதலிடம்

இந்தந தேர்வு முடிவில் மொத்த மதிப்பெண்ணான 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

அரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த ப்ரகார் மிட்டல், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரை சேர்ந்த ரிம்ஷிம் அகர்வால், ஷாம்லியை சேர்ந்த நந்தினி கார்க் மற்றும் கேரளா கொச்சியை சேர்ந்த ஸ்ரீலக்‌ஷ்மி ஆகிய நான்கு பேரும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

மண்டல வாரியாக தேர்வு முடிவுகளில் திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது. சென்னை மண்டலம் 97.37 சதவிகிதத்துடன் இரண்டாம் இடமும், அஜ்மீர் மண்டலம் 91.86 சதவிகித தேர்ச்சியுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.




Leave a Reply