BREAKING NEWS

ஹோண்டாவின் புதிய கார் அறிமுகம்

ஹோண்டாவின் புதிய கார் அறிமுகம்

சென்னை, மே.21-

முன்னணி ப்ரீமியம் கார்கள் உற்பத்தியாளராகத் திகழும் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள, புத்தம்-புதிய 2-ம் தலைமுறை ஹோண்டா அமேஸை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

முற்றிலும் புதிய அடித்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 2-ம் தலைமுறை ஹோண்டா அமேஸ், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடடில், ஹோண்டாவின் புத்தாக்க உத்வேகத்தைக் கொண்டுள்ளதன் வழியாக, வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த கார், அதன் புத்தம் புதிய கம்பீரமான வடிவமைப்பு, நவீனமான மற்றும் இடவசதிமிக்க உட்புறம், அதிக திறன்வாய்ந்த பவர்டிரெயின், மிகச்சிறந்த டிரைவிங் அம்சங்கள், நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் வழியாக, ஒரு படி மேம்பட்ட ப்ரீமியம் அனுபவத்தை அளிக்கிறது.

இந்த அறிமுகம் குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனைகள் மற்றும் சந்தையாக்கல் பிரிவின் இயக்குனர் மகோடோ ஹயோடா கூறுகையில், “இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் உத்வேகங்களை மனதில் கொண்டு, இப்புத்தம்-புதிய அமேஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஹோண்டாவின் மிகப்பெரிய உறுதிமொழியாகும் மற்றும் புத்தம்-புதிய அமேஸ் ர்ஊஐடு வர்த்தனத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றாகத் திகழும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த மாடல் இப்பரிவில் ஒரு புதிய குதூகலத்தை உண்டாக்கும் மற்றும் பல்வேறு சந்தைகளில் உங்களது வர்த்தகத்தினை விரிவாக்கும் செய்யும் வாய்ப்பினை எங்களுக்கு வழங்கும்” என்று கூறினார்.




Leave a Reply