BREAKING NEWS

ஹிந்துஸ்தான் யுனிலீவர் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு.


 

 

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 19.17 சதவீதம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:நடப்பு 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஹிந்துஸ்தான் யுனிலீவரின் மொத்த வருவாய் ரூ.9,622 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.9,335 கோடியுடன் ஒப்பிடும்போது இது 3.07 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் ரூ.1,283 கோடியிலிருந்து 19.17 சதவீதம் உயர்ந்து ரூ.1,529 கோடியானது.குறுகிய கால கண்ணோட்டத்தில் நுகர்வோர் பொருள்களுக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையின்படி, சந்தை மேம்பாட்டிலும், புதுவிதமான தயாரிப்புகள் கண்டுபிடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தவே அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளதாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.




Leave a Reply