தற்போதைய செய்திகள்

ஹாக்கி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

 

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி – மலேசியாவை வீழ்த்தி  இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.
டோங்கா சிட்டி, மே 17-

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் ஹாக்கி அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஜப்பான் மற்றும் சீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.

மலேசியாவை வீழ்த்திய இந்தியா

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மலேசியாவிற்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்திய வீராங்கனைகள் குர்ஜித் கர்(17 வது நிமிடம்), வந்தனா கத்ரியா (33) மற்றும் லால்ரீம்சியாமி(40) தலா ஒரு கோல் அடித்தனர். கொடுக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய குர்ஜித் இந்தியாவிற்கு முதல் கோலை பெற்று தந்தார்.

ஹாட்ரிக் வெற்றி

சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் மலேசியாவின் பெனால்டி பாலை லாவகரமாக தடுத்தனர். இதனால் இந்தியா எளிதான தங்கள் வெற்றியை பெற்றது. இது இந்தியாவிற்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றியாகும். இறுதி போட்டிக்கு தகுதி பெற்றாலும், 19-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி தென்கொரியா அணியுடன் மோதுகிறது. இறுதி போட்டி வருகின்ற 20-ந் தேதி நடைபெற உள்ளது.




Leave a Reply