BREAKING NEWS

ஹஜ் புனித யாத்திரைக்காக காங்கோ நாட்டினருக்கு சவுதி அரேபியா விசா வழங்க மறுப்பு

எபோலா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டினர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது.

காங்கோவில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம் கடுமையாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியதை காரணம் காட்டி,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எபோலா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவிற்கு அமெரிக்காவிடம் இருந்து அதிக உதவிகள் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1700 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கோவின் தென் கிழக்கு நகரங்களில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய எபோலா வைரஸ் உகண்டாவிற்கும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.




Leave a Reply