BREAKING NEWS

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 22-ந் தேதி சந்திராயன்-2 விண்கலம் செலுத்தப்பட்டது

ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஜூலை 22-ந் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம், 3.84 லட்சம் கிலோ மீட்டர் தூரம் விண்ணில் பயணம் செய்து, நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்தது. நேற்று சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து “லேண்டர் விக்ரம்” என்ற ஆய்வுக்கருவி தனியாக வெற்றிகரமாக பிரிந்தது. தற்போது அது, நிலவில் இறங்குவதற்கான சூழலை எதிர்நோக்கி இருக்கிறது. நிலவில் அதனை இறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வரும் 7-ம் தேதி லேண்டர் விக்ரம் நிலவில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதன் பின் அதில் இருந்து வெளியே வரும் “பிரக்ஞான்” என்ற ஊர்தி, நிலவின் மேல் பகுதியை ஆய்வு செய்து, இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பும்.

ஸ்ரீTop of Form

ஸ்ரீஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் 3.84 லட்சம் கிலோமீட்டர் தூரம் விண்ணில் பயணம் செய்து, நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு திரும்பியது.

நிலவைச்சுற்றிவரும் சந்திரயான்-2 விண் கலத்தில் இருந்து ” லேண்டர் விக்ரம்” என்ற நிலவில் தரை இறங்கும் கருவி நேற்று வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. சவாலான பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

தற்போது சந்திரயான் விண்கலம் நிலவை நெருங்கி விட்ட நிலையில், தற்போது அதன் சுற்றுவட்டப்பாதை 5-வது மற்றும் கடைசி முறையாக நேற்று முன்தினம் மாலை 6.21 மணியளவில் மாற்றியமைக்கப்பட்டது.

தொடர்ந்து விக்ரம் விண்கலத்தின் உயரம் முதலாவது வட்டப்பாதையில் இன்று காலை நிலவின் உயரத்தில் 120 கிலோ மீட்டர்களில் இருந்து 109 கிலோ மீட்டர்களாக குறைக்கப்படுகிறது. சந்திராயன் 2-ல் உள்ள விக்ரம் என்ற பகுதி நேற்று பகல் 1.16 மணிக்கு தனியாகப் பிரிக்கப்பட்டது.

தற்போது, பிரக்யான் ஆய்வூர்தியுடன் லேண்டர் விக்ரம் நிலவை நோக்கி பயணிக்கிறது. தொடர்ந்து விக்ரம் விண்கலத்தின் உயரம் முதலாவது வட்டப்பாதையில் இன்று காலை நிலவின் உயரத்தில் 120 கிலோ மீட்டர்களில் இருந்து 109 கிலோ மீட்டர்களாக குறைக்கப்படுகிறது.

தொடர்ந்து 4-ம் தேதி அதிகாலை 2-வது சுற்றுவட்டப் பாதையில் விக்ரம் விண்கலத்தின் உயரம் நிலவின் உயரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர்களாகக் குறைக்கப்படுகிறது. தொடர்ந்து 7-ம் தேதி வரை குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் விக்ரம் விண்கலம் வரும் 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விக்ரம் கலம் தரையிறங்கிய பின்னர், நான்கு மணி நேரம் கழித்து, அதிலிருந்து பிரக்யான் கலம் பிரிந்து நிலாவின் தரையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நிலவின் மேல் பரப்பை ஆய்வு செய்து, அதில் இருக்கும் அபூர்வ தாதுக்கள் பற்றிய விவரங்களையும், படங்களையும் பூமிக்கு அனுப்பும்.




Leave a Reply