BREAKING NEWS

ஸ்டார் ஹெல்த் புதிய திட்டம்.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லீடு இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனம் தான் இந்தியாவில் சுகாதாரக் காப்பீட்டுக்காக தனியாக உருவாக்கப்பட்ட முதல் காப்பீட்டு நிறுவனம். பல நல்ல அம்சங்களையும் பயனுள்ள பாலிசிகளையும் நடைமுறைப்படுத்தி இந்நிறுவனம் பெயர் பெற்று விளங்குகிறது.

இந்த முறை இதய நோய் காப்பீட்டு பாலிசியான ஸ்டார் கார்டியாக் கேர் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் தொகைகளைக் குறைத்து மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதய நோய்க்கான பாலிசியை தங்களது வயதுக்கு ஏற்றவாறு 28 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்த தொகையில் பெறலாம்.

வெளிநோயாளிகள் சிகிச்சை செலவுகள், விபத்து மரணங்களுக்கான இழப்பீடுகள் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியதாக இந்த பாலிசி உள்ளது. முன்பு 405 நடைமுறைகளுக்கு மட்டுமே பாலிசியில் பலன் பெற வகை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட பாலிசியில் கூடுதலாக அனைத்து விதமான அன்றாட பராமரிப்பு நடைமுறைகளும் பாலிசியில் சேர்க்கப்பட்டுள்ளன.




Leave a Reply