தற்போதைய செய்திகள்

வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் துணை வேந்தர் ராமசாமி அறிவிப்பு

 

சென்னை

 

வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் கலந்தாய்வு

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில் 12 இளநிலை வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 18-ந் தேதி இணையதளம் மூலமாக தொடங்குவதாக தெரிவித்தார்.

www.tnau.ac.in என்ற இணையதள முகவரியை -ந் தேதி வெளியிடப்படுகிறது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந் தேதி தொடங்குகிறது. இணையதளத்தில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16-ந் தேதி தொடங்குகிறது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 முதல் 18-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1-ந் தேதி கல்லூரிகள் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply