BREAKING NEWS

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம் விரைவில் முடிக்கப்படும் தி.மு.க. உறுப்பினருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில்.

 

 

 

வேளச்சேரி – பரங்கிமலை

சட்டசபையில் நேற்று ஆலந்தூர் உறுப்பினர் தா.மோ.அன்பரசன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், கடற்கரை-மயிலாப்பூர் பறக்கும் ரெயில் திட்டத்தை கருணாநிதி 9 கோடி ரூபாய் செலவில் கொண்டுவந்தார். பின்னர், 2006ம் ஆண்டு மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரி வரை இந்த திட்டத்தை கருணாநிதி நீட்டித்து அறிவித்தார்.

மேலும், வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 3 கி.மீ. தூரம் பறக்கும் ரெயில் திட்டத்தை நீட்டித்து தரப்படும் என அறிவித்தார். அதன்படி பணிகள் நடைபெற்றது. தடையாக இருந்த ஆதம்பாக்கம் பகுதியில் இருந்த 129 குடிசைகள் அப்புறப்படுத்தி வேலைகள் நடைபெற்றன.

500 மீட்டர்

இதில் 2½ கி.மீ. தூரத்துக்கு தி.மு.க. ஆட்சியில் பணிகள் முடிந்துவிட்டது. ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்கள் அமைக்காமல் 8 வருடமாக திட்டம் முடங்கியுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் தென்னக ரெயில், பறக்கும் ரெயில், மெட்ரோரெயில் ஆகிய 3 ரெயில்களும் பரங்கிமலையில் ஒரே இடத்துக்கு வரும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். எனவே ½ கி.மீட்டர் தூர பணிகளை எப்போது முடிக்கப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:-

நீதிமன்ற வழக்கு

வேளச்சேரி – புனித தோமையார் மலை பறக்கும் ரெயில் விரிவாக்க திட்டம் 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 5½ கி.மீட்டர் தூரத்தில் 3½ கி.மீட்டர் தூரம் அமைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 1½ கி.மீட்டர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. 80 சதவீதமும் இடைக்கால இழப்பீடு நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

விரைவில் முடிவடையும்

ஆனால், புதிய சட்டப்படி நில மதிப்பு மாறி இருப்பதால், நில உரிமையாளர்கள் மீண்டும் இழப்பீடு போதாது என்று வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால், நீதிமன்றம் தடை விதித்ததால், பணிகளை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போது விசாரணை முடிவடைந்துள்ளது. இறுதி தீர்ப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வந்தவுடன், மனுதாரர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கியதும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு துணை முதல்வர் பதிலளித்தார்.




Leave a Reply