BREAKING NEWS

வேலைவாய்ப்பு:

தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஓட்டுநர் வேலை
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 07

பணியிடம்: தஞ்சாவூர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: மேலாளர் – 2

சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தரஊதியம் ரூ.5100

பணி: ஓட்டுநர் – 3

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரு.2400

பணி: தொழில்நுட்ப உதவியாளர் – 2

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2400

தகுதி: 8-ம் வகுப்பு, டிகிரி, முதுகலை பட்டம் எம்.பி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “General Manager, Thanjavur District Cooperative Milk Producers” Union Ltd., Nanjikkottai Road, Thanjavur, PIN Code :- 613 006.”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinthanjavur.com/downloads/thanjavur-aavin-recruitment-notification-2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.




Leave a Reply