BREAKING NEWS

வென்ட் இந்தியா லாபம் 312% அதிகரிப்பு.

 

 

 

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வென்ட் இந்தியா நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் முதல் காலாண்டில் 312 சதவீதம் அதிகரித்துள்ளது.

விற்பனை

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வென்ட் இந்தியா நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் தனிப்பட்ட முறையில் விற்பனையின் மூலமாக ரூ.36.47 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டில் விற்பனை 32 சதவீதம் உயர்ந்து ரூ.25.61 கோடியாக காணப்பட்டது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதியும் 30 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

இதையடுத்து, முதல் காலாண்டில் வரிக்கு பின்பு நிறுவனம் ஈட்டிய லாபம் 312 சதவீதம் உயர்ந்து ரூ.4.49 கோடியாக இருந்தது.

ஏற்றுமதி

ஒட்டுமொத்த அடிப்படையில் நிறுவனத்தின் விற்பனை முதல் காலாண்டில் 27 சதவீதம் அதிகரித்து ரூ.41.62 கோடியாக காணப்பட்டது. வரிக்கு பிந்தைய லாபம் 136 சதவீதம் உயர்ந்து ரூ.5.37 கோடியாக இருந்தது.

தைவான், மத்திய கிழக்கு, பிரிட்டன், ஜெர்மனி, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி சூடுபிடித்ததையடுத்து முதல் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என வென்ட் இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.




Leave a Reply