BREAKING NEWS

வி.ஜ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில் தமிழியக்கம் அமைப்பு தொடங்கப்பட்டது

தமிழ் மொழிக்கான உலகளவிலான தமிழியக்கம் அமைப்பு உருவாக்கம் சென்னையில் ‌நேற்று தொடங்கப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழியக்கம் அமைப்பு

தமிழ் மொழி மற்றும் தமிழர் நலம் காக்கவும் தமிழை பயிற்று மொழியாக்கிடவும் பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களை இணைத்து ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவரும் வகையில் வி.ஜ.டி வேந்தர் டாக்டர் விசுவநாதன் தலைமையில் தமிழியக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் பிற மாநிலங்களில் உள்ள தமிழ் மற்றும் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று காலை 10 மணியளவில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வி.ஜ.டி வேந்தர் டாக்டர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வைகோ கலந்துக்கொண்டார்.

நிகழ்ச்சியில் வி.ஜ.டி வேந்தர் டாக்டர் விசுவநாதன் கூறியதாவது:

இளைஞர்களுக்கு ஆர்வம்

உலகிற்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்திய தமிழினம் அதன் அடிப்படைப் பண்பாட்டை இழந்து வருவதுடன், ஆங்கிலம் மற்றும் வடமொழிக் கலப்படத்தால் தமிழ்மொழி பேச்சு சிறப்பு இழந்து வருகிறது. பல காலம் முயன்றும் தமிழ் மொழி வழக்காடு மொழியாக வழிபாட்டு மொழியாக பயிற்று மொழியாக ஆட்சி மொழியாக மாறவில்லை.

இளைஞர்களுக்கு தமிழ் மொழியின் மீது ஈரப்பும் ஆர்வமும் ஏற்படுத்த தமிழ் மொழி மூலம் கலை இலக்கியம் ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலமாக தமிழின் சிறப்புக்களை எடுத்துக்காட்ட இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருவதுடன் தமிழ் மொழி பேச முடியாத, தமிழினத்துக்கு பிழையில்லாமல் பேசுவதற்கு சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் தமிழ் மொழி கற்று தந்திட தமிழக அரசு முயற்சி எடுக்க வலியுத்தி உள்ளோம். அவர்களும் செய்து தரவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்க வேண்டும். இப்போது குழந்தைகளின் தந்தை பெயரை கேட்டுத்தான் அவர்கள் தமிழர்கள் என அறிந்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உலகிலேயே சிறந்த நூல் திருக்குறள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த உரையாடல் நிகழ்ச்சியில், நாஞ்சில் சம்பத், பழநெடுமாறன் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.




Leave a Reply