BREAKING NEWS

விரைவில் அறிமுகமாகும் டாடா ஹெச்2எக்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெச்2எக்ஸ் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

டாடா ஹெச்2எக்ஸ் கான்செப்ட் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

புதிய கார் டாடா ஹார்ன்பில் என அழைக்கப்படுகிறது. இதன் முன்புறம் பார்க்க டாடா ஹேரியர் போன்று காட்சியளிக்கிறது.

ஹெச்2எக்ஸ் காரின் முன்புறம் புதிய கிரில் வடிவமைப்பு மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், கூர்மையான பம்ப்பர், வீல் ஆர்ச்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

டாடா ஹெச்2எக்ஸ் காரில் 2.5 மீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5ஸ்பீடு மேனுவல் அல்லது 5ஸ்பீடு ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.




Leave a Reply