BREAKING NEWS

விமானப் பயணிகளின் லக்கேஜ் கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய குழந்தை

உலகின் பிஸியான ஏர்ப்போட் ஒன்றில், விமானப் பயணிகளின் உடமைகளை சோதனையிடும் கன்வேயர் பெல்டில் குழந்தை சவாரி செய்து மறுபுறம் வெளியே வந்தது.

அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் குழந்தையுடன் வந்த ஒரு பெண் பயணி தனது போர்டிங் பாஸை நகல் எடுக்க காத்திருந்த நேரத்தில் அவரது குழந்தை கன்வேயர் பெல்டில் பயணம் செய்து மறுபுறம் வந்துள்ளது அங்குள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எடித் வேகா என்பவர் தனது மகன் லோரென்சோ (2) வுடன், பயணம் செய்ய அட்லாண்டா விமான நிலையத்துக்கு வந்துள்ளார். டிக்கெட்டை பிரதி எடுக்க சென்ற நேரத்தில் அவரது மகன் திடீரென பயணிகள் உடமைகள் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பைகள் மீது உட்கார்ந்தப்படி செல்கிறார்.

கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருண்ட குகையை போன்ற ஒரு பெரிய ஸ்கிரீனிங் இயந்திரம் (சோதனையிடும் கருவி) மூலம் இழுக்கப்படுவதை பார்த்த சிறுவன் அதை தவிர்க்க முயற்சிக்கிறார். ஆனால் கன்வேயர் மிக வேகமாக சிறுவனை உள்ளே இழுக்கிறது. பின்னர் சிறுவன் மறுபுறம் வெளியே வருகிறார்.

மற்றொரு அறைக்குள் சிறுவன் வந்து கீழே விழுவதைக் கண்டு திடுக்கிட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை பெல்ட்டிலிருந்து எடுத்து அணைத்துக் கொள்கிறார்கள். இதில் சிறுவனின் கை முறிந்தது, அதிர்ஸ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இதுகுறித்து காவல்துறை தெரிவித்ததாவது:

‘‘ஸ்கிரீனிங் இயந்திரம் ஒரு சிக்கலைக் கண்டறிந்தது, மேலும் காசோலைகள் தேவைப்படும் பைகளுக்கான கன்வேயர் பெல்ட் பாதையில் சென்ற குழந்தையை வேறு ஏதோ பொருள் என்று மேலும் சோதனையிடுவதற்காக அண்டர்கிரவுண்டுக்குச் செல்லும் வேறொரு பாதையில் திருப்பியுள்ளது. பின்னர் அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு குழந்தையை மீட்டனர்.” என்றார்




Leave a Reply