BREAKING NEWS

விநாயகர் சதுர்த்தி – சென்னையில் 2000 இடங்களில், சிலைகள் பிரதிஷ்டை பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்.

 

 

சென்னையில்,  விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் மட்டும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் , சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுழற்சி முறையில், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், 16ம் தேதி நடைபெறும் ஊர்வலம் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சென்னையில் ,  விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த முறை, சென்னையில், சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு, சென்னை பெரு நகர காவல் துறை கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால், காவல் துறையினர் விதித்த கட்டுப்பாட்டில், பள்ளிகள், மருத்துவமனை அருகில், சிலைகள் பிரதிஷ்டை செய்ய கூடாது. எளிதில் தீப்பற்ற்றும் அளவில், பந்தல் மேடைகள் அமைக்க கூடாது. அதிகம் ஒலி எழுப்பி , பொது மக்களுக்கு தொந்தரவுவும், போக்குவரத்துக்கு இடையூறும் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க , காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்து முன்னணி, இந்து மகா சபா என இந்து அமைப்பினர் , சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பீடம், சிலை என மொத்தம் 10 அடிகள் தான் இருக்க வேண்டும் எனவும் விழா கமிட்டியிடம் , காவல் துறை கூறியுள்ளது. இந்த உத்தரவு முறையே, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சிலைகளுக்கு, விழா கமிட்டியே, தனியார் பாதுகாவலர்களை சுழற்சி முறையில் நியமிக்கவும் உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, காவல் துறை சார்பிலும், சிலைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மட்டும் புற நகர் பகுதிகளில் உள்ள சிலைகளுக்கு, போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல் கட்ட ஊர்வலம், வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்து முன்னணி ராமகோபாலன், சிலைகளை ஊர்வலமாக , திருவல்லிக்கேணி பகுதிக்கு கொண்டு சென்று, மெரினா கடலில் கரைக்க செல்வார். அப்போது, அசம்பாவிதம், கலவரம் இவை ஏற்படாமல் இருக்க, காவல் துறை சார்பில் , விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் அன்று, 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில், இணை மற்ற்றும் துணை கமிஷனர்கள் தலைமையில் , போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மெரினாவில், சிலைகள் கரைக்கவும், காவல் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.




Leave a Reply