BREAKING NEWS

விடுதலை நாளை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி விடுதலை கிடைத்ததை முன்னிட்டு இந்த நாள் புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பின்னர் முதலமைச்சர் சட்டப்பேரவை வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். புதுச்சேரியில் நேற்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, சட்டமன்றம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *