BREAKING NEWS

விஜய் படத்துக்கு சிக்கல்

சினிமா நடிகர்கள் அரசியல் பேச ஆரம்பிப்பதால் முதலில் அவர்கள் நடிக்கும் படங்கள் தான் சிக்கலைச் சந்திக்கின்றன. அந்த வகையில் விஜய் நடித்து வெளிவர உள்ள ‘பிகில்’ படத்திற்கான முதல் சிக்கல் ஆரம்பமாகியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய மறைமுக அரசியல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது.
சிலர் விஜய்யை கடுமையாக எதிர்த்துப் பேசினார்கள்.இந்நிலையில் பிகில் இசை விழா நடைபெற்ற தாம்பரம் தனியார் கல்லூரிக்கு,‘‘எதன் அடிப்படையில் அனுமதி கொடுத்தார்கள்?‘‘
என்று விளக்கம் கேட்டு உயர்கல்வித் துறை செயலாளர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்ப்பட்டு இருக்கிறது. ஆக பிகில் பிரச்சினை இன்றி வெளிவருமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *