BREAKING NEWS

வார்னருக்கு உப்புக் காகிதங்களைக் காட்டி கேலி செய்த இங்கிலாந்து ரசிகர்கள்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எட்பாஸ்டனில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறும் போது உப்புக் காகிதங்களைக் காட்டி மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் கேலி செய்தனர்.

டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறிய விடியோப் பதிவை இங்கிலாந்து கிரிக்கெட் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இதன்மூலம் இச்சம்பவங்கள் தெரியவந்துள்ளது.

முன்னதாக, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உப்புக் காகிதங்களைக் கொண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் இளம் வீரர் கேமரூன் பேன்கிராப்ட் ஆகியோர் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply