BREAKING NEWS

வாகனம், உதிரிபாக இறக்குமதி வரியை குறைத்தது சீனா.

வாகனம், உதிரிபாக இறக்குமதி வரியை குறைத்தது சீனா

பீஜிங்,மே 23-

வாகனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்துள்ளது. இது அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

இறக்குமதி

இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்களுக்கான வரியை குறைக்க திட்டமிட்டுள்ளதாக சீனா ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கேற்ப, வாகனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாக இறக்குமதி வரியை குறைத்து சீனா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பெரும்பாலான வாகனங்களுக்கு இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

தற்போது சீனாவில் இறக்குமதி செய்யப்படும் டிரக்குகளுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. சில வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதுபோல் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply