BREAKING NEWS

வருமான வரி வசூலில் வரலாற்று சாதனை

 

 

நாட்டின் வருமான வரி வசூல் சென்ற நிதியாண்டில் வரலாற்று சாதனை அளவாக ரூ.10.03 லட்சம் கோடி திரட்டப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வாரியத்தின் உறுப்பினர் ஷாப்ரி பட்டாசாலி நேற்று முன்தினம் கூறியதாவது:-

வரலாற்று சாதனை

சென்ற 2017-18 நிதியாண்டில் வருமான வரி கணக்கு தாக்கலின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் 6 கோடியே 92 லட்சமாக இருந்தது. இது கடந்த 2016-17 நிதியாண்டின் எண்ணிக்கையான 5 கோடியே 61 லட்சத்துடன் ஒப்பிடுகையில் 1 கோடியே 31 லட்சம் அதிகம்.

மேலும், வருமான வரி வசூலைப் பொருத்தவரையில் சென்ற நிதியாண்டில் வரலாற்று சாதனை அளவாக ரூ.10.03 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது.

இலக்கு நிர்ணயம்

2017-18-இல் வருமான வரி துறையிடம் 1 கோடியே 06 லட்சம் பேர் புதிதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். நடப்பாண்டில் இந்த எண்ணிக்கையை 1 கோடியே 25 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்களிலிருந்து மட்டும் 1 கோடியே 89 லட்சம் பேர் வருமான வரித் துறையிடம் புதிதாக கணக்கு தாக்கலை செய்துள்ளனர்.

மேலும், அந்த மண்டலங்களிலிருந்து சென்ற நிதியாண்டில் ரூ.7000 கோடியே 97 லட்சம் வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2016-17-ஆம் ஆண்டின் வசூலான ரூ.6000 கோடியே 82 லட்சத்துடன் ஒப்பிடுகையில் இது 16.7 சதவீதம் அதிகமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply