BREAKING NEWS

வருகிற நவம்பர் 3-ந் தேதிக்குள் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு – மாநகராட்சி ஆணையர் தகவல்.

 

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்களை நம்பர் 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு (Layouts) மற்றும் மனைகளை (Plots) வரன்முறைப்படுத்த வேண்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை மூலம் 20.10.2016க்கு முன்னர் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தப்படும்.

ஆன்லைன் பதிவு

அதாவது அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் உள்ள மனைகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை ஆவணம் 20.10.2016க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின், அவை வரன் முறைப்படுத்தவதற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

மனை வரன் முறைப்படுத்த வேண்டி விண்ணப்பத்தினை பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் ஆவணங்கள் மற்றும் வரைபடத்தோடு சமர்ப்பிக்க வேண்டும். அவற்றோடு online-ல் பதிவு செய்யப்பட்ட படிவத்தையும் இணைக்க வேண்டும்.

அறிவுறுத்தல் கடிதம்

மனை அமைந்துள்ள மனைப்பிரிவின் அமைப்பு தொடர்பாக கொள்கை மனைப்பிரிவு ஒப்புதல் (in-principle Layout framework approval) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை மனை வரன்முறைப்படுத்த online-ல் 15,414 பதிவுகள் செய்யப்பட்டு, அதில் 6,342 விண்ணப்பங்கள் ஆவணங்களோடு பெருநகர சென்னை மாநகராட்சியால் பெறப்பட்டுள்ளது. இதில் 1,445 விண்ணப்பங்களுக்கு மனை வரன்முறைப்படுத்துவதற்கான தொகையினை செலுத்த அறிவுறுத்தல் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

349 மனைப்பிரிவு கொள்கை ஒப்புதல்

மேலும், 349 மனைப்பிரிவு கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 330 மனைப்பிரிவு கொள்கை ஒப்புதல் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு விரைவில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. மனை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக www.tnlayoutreg.in < http://www.tnlayoutreg.in.? > என்ற வலைதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம். அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 03.11.2018.

இம்மனைக்கான திறந்தவெளி ஒதுக்கீடு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

கட்டின அனுமதி இல்லை

இவ்வாறான மனையினை வரன்முறைப்படுத்தாமல் இருப்பின், கட்டிட அனுமதிகள் அளிக்கப்படமாட்டது. மேலும், இம்மனைகளுக்கு மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படமாட்டாது. எனவே, பொதுமக்கள் இந்த வரன்முறைப்படுத்தும் வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி தங்களின் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்திக் கொண்டு அதன் பயன்களை பெற்றுக்கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.




Leave a Reply