BREAKING NEWS

வட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது.


 

சென்னை, கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர் சேர்ந்தவர் சங்கீதா (31) இவர் கடந்த 6-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றார் பின்னர் திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 11 1/2 பவுன் தங்க நகைகளை யாரோ திருடிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து சங்கீதா கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நகைகளை திருடியது மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜமாலுதீன் (42), மூர்செம் ஷேக் (50), முனீர்ரூல் (33), முகமது ரோஜா (20) என்பவது தெரியவந்தது. இதை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் 11 1/2 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.




Leave a Reply