BREAKING NEWS

வடகிழக்கு பருவமழை தீவிரம்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.பருவமழை தீவிரம்வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருத்தாசலத்தில் நேற்று முன் தினம் இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை நேற்று காலை வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது.

மழை நீருடன் சாக்கடையும் கலந்து நிற்பதால் பயணிகள் அவதிப்பட்டனர். செம்பலாக்குறிச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் சித்தேரிக்குப்பம் மற்றும் அந்த வழியாக செல்லும் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதே போல கம்மாபுரம், மங்கலம் பேட்டை, ஆலடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியிலும் மழை பெய்தது.பொதுமக்கள் சிரமம்பண்ருட்டி, திருவதிகை, எல்.என்.புரம், அண்ணாகிராமம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை நீடித்து வருகிறது.கடலூர் நகர் பகுதியில் கடந்த 5 நாட்களாக மழை பெய்தது. நேற்றும் 6-வது நாளாக கனமழை பெய்தது.

காலை முதலே மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குடைபிடித்த படி சென்றனர். திருப்பாதிரிப்புலியூர், திருவந்திபுரம், கோண்டூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், தூக்கணாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை பெய்து வருகிறதுகன மழையால் கடலூர் சித்தூர் சாலை சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.சிதம்பரம் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ஒரே நாளில் 51.90 மழை பதிவாகி உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *