BREAKING NEWS

வங்கி ஊழியர்கள் 30,31-ந் தேதி வேலை நிறுத்தம் – 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு.

வங்கி ஊழியர்கள் சங்கம் ஊதிய உயர்வு கோரி, வருகிற மே 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

வேலை நிறுத்தம்

மும்பையில் ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 5-ந் தேதி நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்கு 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

அதன்படி இம்மாத இறுதியில் 30 மற்றும் 31 தேதிகளில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் தனியார், பன்னாட்டு வங்கி ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர். இதனால் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.




Leave a Reply