BREAKING NEWS

நல்லகண்ணுவிற்கு வீடு வழங்க வேண்டும் தமிழக அரசிற்கு பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

தமிழகத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு அரசு சொந்தமாக வீடு வழங்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வசித்து வந்த தமிழக அரசுக்கு சொந்தமான வீட்டில் இருந்து காலி செய்யுமாறு தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதற்கு, பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வீடு வழங்க வேண்டும்

சென்னை தியாகராயநகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான குடியிருப்பில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த தமிழகத்தின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுவை உடனடியாக காலி செய்யும்படி ஆணையிடப்பட்டு அவரும் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருக்கிறார்.

94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம் தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply