BREAKING NEWS

லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை விரிவாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில் இயற்றப்பட்ட

தமிழகத்தில் இயற்றப்பட்ட லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த மனுவில் திருத்தங்கள் மேற்கொண்டு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு இயற்றியுள்ள லோக் ஆயுக்தா சட்டம் வலுவில்லாதது என புகார் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் மனு அளித்திருந்தார். தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தை எதிர்த்த வழக்கில் விரிவான மனுவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை 4 மாதத்தில் உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டார். மேலும் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நீதித்துறையை சார்ந்திராத ஓய்வு ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் கோவை மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் சங்க நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ராஜாராம், ஆறுமுகம் ஆகிய 2 பேரும் விதிகளுக்கு புறம்பாக லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களின் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களின் நியமனத்திற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் ராஜேந்திரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நீதிபதி அளித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா அமைப்பை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள். ஆனால் இது சாத்தியம் கிடையாது. இருப்பினும் அதில் இருக்கும் எந்த பிரிவுக்கு எதிராக நீங்கள் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் என்பது குறித்து தெளிவாக மனுவை திருத்தி அதில் குறிப்பிட்டு அடுத்த 2 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனுவில் திருத்தங்கள் மேற்கொண்டு விரிவாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு இயற்றியுள்ள லோக் ஆயுதா சட்டம் வலுவில்லாதது என புகார் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் மனு அளித்திருந்தார்.




Leave a Reply