BREAKING NEWS

லோக்சபா, சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் –  தேசிய சட்ட ஆணையம் அழைப்பு. 

 

லோக்சபா, சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தேசிய சட்ட ஆணையம் வருகிற 7,8 ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது.

ஒரே நேரத்தில் தேர்தல்

‘நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். ஆண்டில் பல மாதங்கள் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கிறது. அதை தவிர்க்க நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது’ என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. வரும், 2019ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டு என்று இரண்டு கட்டங்களாக, ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்றும் சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

அதாவது, 2021ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களுக்கும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம். மற்ற மாநிலங்களில் (உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா, டெல்லி, பஞ்சாப்) 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்த பரிந்துரை செய்துள்ளது. இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும்.

சட்ட திருத்தம்

இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த, வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அழைப்பு கடிதம் எழுதி உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் பாஜ, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஆகும். ஏற்கனவே ஒரே முறை தேர்தல் நடத்துவது குறித்து சட்ட ஆணையம் கட்சிகளுக்கு கடிதம் எழுதியது. ஆனால், எந்த அரசியல் கட்சியும் அதற்கு பதில் அளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், மீண்டும் ஆலோசனை கூட்டத்துக்கு சட்ட ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ேதர்தல் ஆணையம் ரெடி

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைக்கும் ஒரே ேநரத்தில் தேர்தல் நடத்த, இந்திய தேர்தல் ஆணையமும் விரும்புகிறது. இதையே, கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்றால் முறையான சட்ட வடிவம் உருவாக்க வேண்டும். குதிரைக்கு முன் வண்டி செல்ல முடியாது. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நிறைய நேரம் தேவைப்படும். தேர்தல் ஆணையமும், அரசியல் அமைப்பின் ஓர் அங்கம்தானே. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், நேரம், பணம் விரயம் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply