BREAKING NEWS

லோக்சபாவில் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.

 

 


லோக்சபாவில் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படவுள்ளதால் நாடு முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பா.ஜ.க அரசு தோல்வி அடையும் வாய்ப்புகள் குறைவு என்றாலும் கூட ஒரு விதமான எதிர்பார்ப்பு கலந்த பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. முதல் முறை கடந்த 15 ஆண்டுகளில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வருவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2003-ம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு பதவியில் இருந்தது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் வாஜ்பாய் அரசு தப்பியது. போதிய பலம் இல்லாததால் எதிர்க்கட்சிகள் அப்போது தோல்வி அடைந்தன. இப்போதும் அதே நிலைதான்.

கூட்டணிக் கட்சிகள் மற்றும் அ.தி.மு.க.வின் 37 எம்.பிக்கள் கையில் இருப்பதால் பா.ஜ.க படு தைரியமாக உள்ளது. இருப்பினும் தங்களது எதிர்ப்பைக் காட்ட, முடிந்தவரை முட்டி மோத எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து உள்ளன.




Leave a Reply