BREAKING NEWS

லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஹார்திக் பாண்டியா

முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

25 வயது பாண்டியா 11 டெஸ்டுகள், 54 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பாண்டியா, முதுகு வலி காரணமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சிகிச்சை பெறுவதற்காகச் சமீபத்தில் லண்டனுக்குச் சென்றார் பாண்டியா. அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

இந்தத் தகவலை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் பாண்டியா. குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஓய்வுக்குப் பிறகே மீண்டும் சர்வதேச ஆட்டங்களில் பாண்டியா பங்கேற்பார் எனத் தெரிகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *