BREAKING NEWS

‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கை ஆசிரியர் கொலையாளிகள்: பாகிஸ்தான் தீவிரவாதி உள்பட மூவர் அடையாளம் தெரிந்தது.


மோட்டார் சைக்கிளில்

ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியாகும் ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கையின் ஆசிரியர் சுஜாத் புகாரி, கடந்த 14-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரியை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியை போலீஸ் வெளியிட்டது.

3 பேர் அடையாளம் தெரிந்தது

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்திரிக்கையாளரின் பாதுகாவலர்களும் உயிரிழந்தார்கள். இது தொடர்பான விசாரணை தொடர்ந்தது.

இப்போது பத்திரிக்கையாளர் படுகொலையில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி உள்பட மூவர் அடையாளம் காணப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது-

மர்மம் விலகியது

‘‘பத்திரிக்கையாளர் படுகொலையில் மர்மம் விலகியுள்ளது, அவரை கொலை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன்.

ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு இதில் தொடர்பில்லை என தெரியவந்தது. இப்போது கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்’’.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply