BREAKING NEWS

ரியல்மி 5 விலை குறைவாக நிர்ணயிக்கப்படுகிறதா?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவில் ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் நான்கு பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

ரியல்மி 5 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ. 10,000க்குள் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 8,999 முதல் துவங்கலாம் என தெரிகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் சிப்செட் வழங்கப்படலாம்.

முன்னதாக ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும் என ரியல்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.

இவற்றில் பிரைமரி சென்சாருடன், அல்ட்ராவைடு சென்சார், சூப்பர் மேக்ரோ சென்சார், டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 48 எம்.பி. கேமராவுடன் நான்கு சென்சார்கள் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்திருக்கிறது.

ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட், ஆக்டாகோர் க்ரியோ 360 கோர் பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதன் பிரைமரி கேமராவில் சோனியின் IMX586 சென்சார் வழங்கப்படலாம்.

இத்துடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் கிளாஸி பேக் பேனல், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.




Leave a Reply