BREAKING NEWS

ராமேசுவரத்தில் கனமழை கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

ராமேசுவரத்தில் நேற்று காலை சுமார் ஒன்றரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள்.

கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்யத்தொடங்கியது. தூறலுடன் தொடங்கி பின்னர் கனமழையாக மாறியது.

காலை 4.15 மணி முதல் 5.45 மணி வரை நீடித்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

மழையின் அளவு

ராமேசுவரத்தில் 84.20 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ராமேசுவரம்- 84.20

பாம்பன்- 69.20

தங்கச்சிமடம்- 56.60

மண்டபம்- 8.60

பள்ளமோற்குளம்- 3.00

மொத்த மழை அளவு 221.60 மில்லி மீட்டர்.

ராமநாதபுரத்தில் நேற்று காலை முதல் மழை தூறிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக ஆரம்பக்கட்ட விவசாயப்பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *