BREAKING NEWS

ராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடிய தோனி

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனி, ராணுவ வீரர்களுடன் இணைந்து வாலிபால் விளையாடும் காட்சி வைரலாகி வருகிறது.

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து தோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன.

இதையடுத்து ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், தோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது.

இதையடுத்து தோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

தோனி, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார். இந்நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் டோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி டோனி காஷ்மீரில் வீரர்களுடன் ராணுவ ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ராணுவ வீரர்களுடன் இணைந்து தோனி, வாலிபால் விளையாடும் வீடியோவை தோனியின் ரசிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்கிற விவரம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply