தற்போதைய செய்திகள்
TTV DINAKARAN

ராஜேஷ் லக்கானியிடம் தமிழிசை, தினகரன் புகார் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் முறைகேடு…..

சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போலீஸ் அதிகாரிகள் முறைகேடாக நடப்பதாக டி.டி.வி.தினகரன் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து முறையிட்டுள்ளார். மேலும் தமிழக பாஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் புகார் தெரிவித்துள்ளார்.
பிரசாரம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வரும் 19-ந் தேதி வரை பிரச்சாரம் செய்யலாம். இதற்கு இன்னும் 8 நாட்கள் மட்டும் உள்ளது. ஆகவே எல்லா வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முக்கி கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் என அனைத்து நிலைத்தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசனை ஆதரித்து நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் தினகரனுக்கு ஆதரவாகவும் அவரது ஆதரவாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் தெரிவித்தார். அதில் ஆர்.கே.நகர் பணபட்டுவாடாவை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் டி.டி.வி.தினகரனும் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் தலைமை தேர்தல் அதிகாரியை டி.டி.வி. தினகரன் சந்தித்தார்.

இது குறித்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறும்போது, ” ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காவல்துறை நியாயமாக செயல்படவில்லை. மேலும் எங்கள் கட்சி நிர்வாகிகளை போலீசார் மிரட்டுகின்றனர் ஆகையால் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.
Leave a Reply