BREAKING NEWS

ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று தொடக்கம் பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்காக

அடுத்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் மக்களுக்காக, ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று தொடங்க உள்ளது.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரிவர்கள், மாணவர்கள் ஆகியோர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், பேருந்து, ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படும். இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரயில், பேருந்துகளில் முன்பதிவு வசதி ஆண்டுதோறும் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான தீபாவளிப் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது.

முன்பதிவு தொடக்கம்

இந்த நிலையில், அடுத்தாண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12-ந் தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே ரயில்வே அறிவித்திருந்தது. இதன்படி, ரயில்வே முன்பதிவு இன்று தொடங்கப்படுகிறது. இந்த முன்பதிவு வசதி மூலம், ஜன.10-ந் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட உள்ளது.

தினமும் காலை 8 மணிமுதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. தேதிகள் வாரியாக எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தேதிக்கு முன்பதிவு என்பது குறித்த விவரம் பின்வருமாறு:

ஜனவரி 10-ம் தேதிக்கான முன்பதிவு: இன்று

ஜனவரி 11-ம் தேதிக்கான முன்பதிவு: நாளை(13-ந் தேதி)

ஜனவரி 12-ம் தேதிக்கான முன்பதிவு: நாளை மறுநாள்(14-ந் தேதி)

ஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு: 15-ம் தேதி

ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு: 16-ம் தேதி

ஜனவரி 19-ம் தேதிக்கான முன்பதிவு: 21-ந் தேதி

ஜனவரி 20-ம் தேதிக்கான முன்பதிவு: 22-ந் தேதி




Leave a Reply