தற்போதைய செய்திகள்

ரஜினி, கமல் பாரதீய ஜனதாவின் இரு தயாரிப்புகள் நாஞ்சில் சம்பத் தாக்கு…..

பீளமேடு,

கமல், ரஜினி இரண்டு பேரும் பாரதீய ஜனதாவின் இரு தயாரிப்புகள் என்று நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசே காரணம்

டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறுகையில்:-

காவிரி பிரச்சினையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். இந்த பிரச்சினையில் காலதாமதம் ஆவதற்கு மத்திய அரசே காரணம்.

நான் சொற்பொழிவாளன்

கர்நாடக தேர்தலை மனதில் வைத்து செயல்படுகிறார்கள். இந்த அரசு நிழல் அரசு. சட்ட மன்றத்தில் எதிர் கட்சிகளுக்கு உரிய நேரம் ஒதுக்க வேண்டும். சின்ன சின்ன ஆதாயத்துக்காக போகிறவன் நானல்ல. ஆதாயம் தேடும் அரசியல் வாதியும் நான் அல்ல. நான் சொற்பொழிவாளன்.

அண்ணா, திராவிடத்தை அலட்சியப்படுத்தி விட்டதால் தினகரன் கூர் இல்லாத அம்பு ஆகி விட்டார்.
கமல், ரஜினி இருவரும் பாரதீய ஜனதாவின் இரு தயாரிப்புகள். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply