BREAKING NEWS

ரஜினியின் அரசியல் பற்றி அமிதாப்பச்சன் பேட்டி

இந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். 75வது வயதிலும், இன்னமும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் அவர். சிரஞ்சீவியுடன் அவர் நடித்துள்ள சை ரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படம் குறித்து அமிதாப் பச்சனும், சிரஞ்சீவி ஒன்றாக சேர்ந்து பேட்டி கொடுத்தனர்.
அப்போது பேசிய அமிதாப்,பச்சன் ‘‘ சிரஞ்சீவிக்கும் சரி . ரஜினிக்கும் சரி அரசியலில் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தினேன். ஆனால் இருவருமே தனது அறிவுரையை கேட்கவில்லை‘‘ என்றார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “சிரஞ்சீவி ஒருநாள் என்னை பார்க்க வந்திருந்தார். அப்போது தான் அரசியலில் ஈடுபட இருப்பதாகக் கூறினார். அந்த தவறை செய்ய வேண்டாம் என நான் எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை.
மீண்டும் ஒரு நாள் என்னிடம் வந்தார். ‘‘உங்கள் பேச்சை கேட்காமல் நான் அரசியலில் நுழைந்தேன். ஆனால் இப்போது அதில் இருந்து விலகிவிட்டேன்‘‘ என்றார். அரசியலில் நுழைய வேண்டாம் என ரஜினிக்கும் நான் அறிவுரை கூறினேன். அவரும் என் பேச்சை கேட்கவில்லை” என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *